தமிழக செய்திகள்

2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல் ஏரி

கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சென்னை புழல் ஏரி நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்நிலையில், 2வது நாளாக இன்றும் புழல் ஏரி அதன் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அதேவேளை, ஏரியில் இருந்து 300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SCROLL FOR NEXT