சென்னை,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 நாள்கள் விடுமுறையும் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும், ஒன்று முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது.
இருப்பினும், அக். 6 ஆம் தேதியில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், இரு தொகுதிகளுக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 தேதிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு அக். 6 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்குள்பட்ட பள்ளிகள் அக். 7 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது