மதுரை,
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாளை தமிழகம் வருகிறார். தமிழக காங்கிரஸ், தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதும், ஒரு கோடி ரூபாய் செலவில், 'இயக்க மறுசீரமைப்பு திட்டம்' என்ற பெயரில், மாமல்லபுரத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தார்.
கடந்த 23ம் தேதி முதல் ஆகஸ்டு, 1 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், நாளை ராகுல் பங்கேற்கிறார். இதற்காக, நாளை தமிழகம் வரும் அவர், பயிற்சி முகாமில் மூன்று மணி நேரம் செலவிடும் வகையில், பயண திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், முகாமில் விவசாயிகள், நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் சந்திப்பு போன்ற களப்பயிற்சி அளிக்கப் பட்டது. "எங்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ராகுல் எங்களை சந்திக்கிறார். முதல்-அமைச்சர் விஜயையும் ராகுல் காந்தி சந்திப்பார்," என தெரிவித்தார்.