தமிழக செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி - கோவையில் இன்று ரெயில் சேவைகள் மாற்றம்

மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில்கள் இன்று கோவை வடக்கு ரெயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில்கள் அக்டோபர் 3-ந்தேதி(இன்று) கோவை வடக்கு ரெயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அக்டோபர் 4-ந்தேதி(நாளை) இயங்கும் 6 முக்கிய விரைவு ரெயில்கள், கோவை சந்திப்புக்கு பதில் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும் எனவும், கேரள எக்ஸ்பிரஸ், விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கோவைக்கு பதிலாக போத்தனூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT