தமிழக செய்திகள்

தண்டவாள மறுசீரமைப்பு பணி: செங்கோட்டை-ஈரோடு ரெயில் பகுதியாக ரத்து

தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண். 16845) வருகிற 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை, அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வ.எண். 16846) இன்று (செவ்வாய்க்கிழமை), வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை, 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை, 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மற்றும் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை செங்கோட்டை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாசஞ்சர் ரெயில்

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56711) இன்று, வருகிற 16-ந் தேதி, 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை, வருகிற 30-ந் தேதிகளில் மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56714) இன்று, 16-ந் தேதி, 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை, வருகிற 30-ந் தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று, வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை, 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை, அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.