கடந்த 2023-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அன்புநகரை சேர்ந்த சிவராமன் (வயது 65) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்களிடம் அறிமுகமாகி ெரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-ல் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று சிவராமன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, மோசடி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ,8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. மயில்சாமி மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு-I போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் (பொறுப்பு) முருகப்பெருமாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.