தமிழக செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்

ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தன. இதன் காரணமாக 3 ரெயில்களின் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.

பராமரிப்பு பணிகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் (திருச்சி மார்க்கத் தில்) தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இப்பணியில் ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவினரும். சிக்னல் பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய தண்டவாளங் களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணிகளும், புதியதாக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் போடும் பணிகளும், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

இதற்காக திருச்சியில் இருந்து ராட்சத பேக்கேஜிங் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில் ரெயில்வே ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தண்டவாளங்களை வலுப்படுத்த...

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் தடம் புரளாமல் எளிதாக சென்றடையும் வகையில் தண்டவாளங்களை வலுப்படுத்தும் விதமாகவும், பிற்காலத்தில் ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கு வசதியாகவும் இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றனர்.

இப்பணிகள் காரணமாக நேற்று தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு முண்டியம் பாக்கத்துடன் நிறுத்தப்பட்டது. அதுபோல் விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் விழுப்புரம்-சேர்ந்தனூர் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

SCROLL FOR NEXT