தமிழக செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.

சென்னை,

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காலை முதல் மித அளவிலான மழை பெய்து வருகிறது.

விமான நிலையம், தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT