சென்னை,
காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.