தமிழக செய்திகள்

வரைமுறையின்றி பேசுகிறார் ஆ. ராசா- அமைச்சர் வன்னி அரசு கடும் தாக்கு

தவெக அமைச்சரவையில் பங்கேற்றுள்ள விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளை ஆ. ராசா தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விசிக நிர்வாகியும் தமிழக சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, திமுகவின் ஆ. ராசா கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,இன்று பேசினார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், "ஆர். ராசா அவர்கள் சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது.

எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார். முன்னாள் முதல்வர் அவர்கள், அவரை அழைத்து கண்டிக்க வேண்டும். அவர் பேசுவது என்பது அவருக்கே அது சரியா என்பதை நான் அவருடைய கோணத்திலேயே விடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.