சென்னை,
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா வாழ்த்துகளை மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அழியாத புகழ்! காலத்தை வென்ற தமிழர் பெருமை!
கடல் கடந்து சோழப் பேரரசின் கொடியைப் பறக்கவிட்டு, நிர்வாகத் திறத்தாலும், வீரத்தாலும், கலை மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளாலும் உலக வரலாற்றில் தனி முத்திரை பதித்த மாமன்னர் ராஜராஜ சோழன்!
தஞ்சைப் பெரிய கோவில் - வெறும் கற்கோயில் அல்ல; தமிழர்களின் அறிவாற்றலுக்கும், கலைத்திறனுக்கும், கட்டிடக்கலை மேன்மைக்கும் ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் சான்று!
மன்னர்கள் பலர் வரலாற்றில் வாழ்ந்தார்கள்; வரலாறாகவே வாழ்பவர்கள் சிலர்தான்! அந்தச் சிலரில் தலையாயவர் ராஜராஜ சோழன்!
பொன்னியின் செல்வனாகப் பிறந்து, சோழப் பேரரசின் பொற்காலத்தைப் படைத்த மாமன்னரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில், அவரது வரலாற்றுச் சாதனைகளைப் போற்றி வணங்குவோம்!
வாழ்க தமிழ்! ஓங்குக தமிழர் புகழ்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.