சென்னை,
ராஜராஜ சோழனின் சதய விழாவிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும், கட்டிடக்கலை மற்றும் கலைப் பண்பாட்டின் சிறப்பையும் உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் சதய விழா இன்று!
தனது ஆட்சித் திறன், நிர்வாகத் திறமை, கடற்படை வலிமை மற்றும் தொலைநோக்குப் பார்வையால் சோழப் பேரரசை உலக அரங்கில் உயர்த்திய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்கள், தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றவர். தஞ்சைப் பெரிய கோயில் எனும் ஒப்பற்ற கலைப் பொக்கிஷத்தை உருவாக்கி, தமிழர்களின் கட்டிடக்கலைத் திறனையும் ஆன்மிகப் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றியவர். தமிழர் பெருமையை உலகெங்கும் உயர்த்திய மாமன்னரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.