தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவுக்காக தயாராகும் ராஜரத்தினம் மைதானம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடங்க உள்ளது.

சென்னை,

தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜரத்தினம் மைதானம்

இதனிடையே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் நாளை மாலை 5 மணிக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொள்ள நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.