தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக பதவி ஏற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என். ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT