தங்கம்–பணம் சிக்கிய விவகாரம் 
தமிழக செய்திகள்

ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம்–பணம் சிக்கிய விவகாரம்: சுங்கத்துறையிடம் நேரடியாக ஒப்படைக்காதது ஏன்? எஸ்.பி. விளக்கம்

போலீசார் பறிமுதல் செய்த பொருட்களில் இருந்து தங்கம் மற்றும் பணத்தை பிரித்து சுங்கத்துறையிடம் நேரடியாக ஒப்படைக்க சட்டத்தில் இடமில்லை.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அது ஏன் உடனடியாக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறித்து எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

ரகசிய தகவல்

ராமநாதபுரம் பகுதியில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது கணக்கில் வராத 3.8 கிலோ தங்கக்கட்டிகள், 226 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இ-சாக்ஷியா செயலியில் பதிவு

கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தின் முழு விவரங்களும், புதிய சட்ட நடைமுறைகளின்படி இ-சாக்ஷியா செயலி மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக ஒப்படைக்காதது ஏன்?

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை ஏன் உடனடியாக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கவில்லை?" என எழுந்த கேள்விக்கு, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விளக்கமளித்துள்ளார்

சட்ட நடைமுறை முக்கியம்

போலீசார் பறிமுதல் செய்த பொருட்களில் இருந்து தங்கம் மற்றும் பணத்தை பிரித்து சுங்கத்துறையிடம் நேரடியாக ஒப்படைக்க சட்டத்தில் இடமில்லை. இதனால், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் சட்ட நடைமுறைகளின்படி உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட விசாரணை

நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட சுங்கத்துறை மற்றும் விசாரணை அமைப்பினர் உரிய முறையில் இந்த தங்கத்தை பெற்றுக்கொண்டு தங்களது அடுத்தகட்ட விசாரணையை தொடங்குவார்கள் என எஸ்பி தரப்பில் திட்டவட்டமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT