தமிழக செய்திகள்

முதல் - அமைச்சர் விஜய்யை சந்தித்து கும்பாபிஷேக பிரசாதம் வழங்கிய ரமேஷ்

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் கடந்த 17-ந் தேது நடைபெற்றது.

சென்னை,

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் - அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கும்பாபிஷேக பிரசாதத்தை அமைச்சர் ரமேஷ் வழங்கினார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கும்பாபிஷேகம்

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.

பிரசாதம்

இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்-க்கு நேரில் வழங்கப்பட்டது.

அப்போது, முதல் - அமைச்சர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT