கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டன.

சென்னை,

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் - ஹுப்ளி சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹுப்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 07355) அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.

இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹுப்ளிக்கு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07356) அக்டோபர் 5, 12, 19, 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT