தமிழக செய்திகள்

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரெயில்

வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரெயில் இன்று ராமேசுவரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும்.

திருச்சி,

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமேசுவரம்- சென்னை எழும்பூர் இடையே ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06035) இயக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரெயில் இன்று (சனிக்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மதியம் 2.15 மணிக்கு வந்து 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மேலும் இந்த ரெயிலில் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி 2, ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டி 3, ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி 9, படுக்கை வசதி கொண்ட பெட்டி 4, 2-ம் வகுப்பு பொதுப்பெட்டி 1, 2-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மற்றும் சரக்குப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT