தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை: ஒரே இரவில் 2 கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை - போலீஸ் தீவிர விசாரணை

அதிகாலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர்கள் நகை மற்றும் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, ஒரே இரவில் அடுத்தடுத்துள்ள இரண்டு பழமையான கோவில்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கோவில்கள்

வன்னிவேடு கிராமத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் மற்றும் பூதேவி வைகுண்ட வரதராஜ பெருமாள் ஆலயம் ஆகிய 2 கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

பணம், நகை கொள்ளை

இந்த கோவில்களில் இரவு நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் மதில் சுவர் மீது துணியை கட்டி ஏறி வந்து, அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் பெருமாள் கோவிலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

அதிகாலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர்கள் நகை மற்றும் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வாலாஜாபேட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT