தமிழக செய்திகள்

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 55) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (18.9.2026) மாரியப்பனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT