தமிழக செய்திகள்

இரவில் வடமாநில நபர்களுக்கு பொருட்கள் வினியோகம் ; ரேஷன் கடை பணியாளர் பணியிடை நீக்கம்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் ரேஷன் கடையை இரவு 8 மணியளவில் திறந்து வைத்து அப்பகுதியில் தங்கி இருக்கும் வடமாநில நபர்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை கடை விற்பனையாளர் வினியோகம் செய்ததாகவும், இவர் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இது குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உளுந்தை ரேஷன் கடை விற்பனையாளர் அருள் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT