தமிழக செய்திகள்

ரியல் முதல்-அமைச்சரா? இல்லை ரீல்ஸ் முதல்-அமைச்சரா? - வானதி சீனிவாசன் விமர்சனம்

பெண்களின் பாதுகாப்பும், போதைக் கலாசாரமும் அதிகரித்து தமிழகமே தலைகுனிவை சந்தித்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களின் பாதுகாப்பும், போதைக் கலாசாரமும், கஞ்சா புழக்கமும் அதிகரித்து தமிழகமே தலைகுனிவைச் சந்தித்து வரும் வேளையில் முதல்-அமைச்சராக மக்களுக்கு பாதுகாப்பு குறித்து குறைந்தபட்சம் ஓர் அறிக்கை கூட வெளியிடாமல் ரீல்ஸ் ஷூட் நடத்தி அதிகாலையில் வெளியிட்டு கண்டென்ட் கிரியேட்டராக மாறிய நீங்கள் ரியல் முதல்-அமைச்சர் அல்ல... ரீல்ஸ் முதல்-அமைச்சர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் முதல்-அமைச்சர் அவர்களே..!

இனி அடுத்து வரும் காலங்களில் ரீல்ஸ் மட்டும்தான் விடியா அறிவாலயத்தின் முழு நேர வேலை என்பதை மக்கள் உணர வைக்கும் நேரம் நெருங்கி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.