தமிழக செய்திகள்

சென்னை -செங்கோட்டைக்கு வாரத்தில் 2 நாட்கள் சிறப்பு ரெயிலை இயக்க பரிந்துரை

சென்னை -செங்கோட்டைக்கு வாரத்தில் 2 நாட்கள் சிறப்பு ரெயிலை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, நெல்லை வழியாக வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரெயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ரெயிலை இயக்குவதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், சனி, ஞாயிற்றுக்கிமைகளில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை. சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.