தமிழக செய்திகள்

செப்பு தகடுகள் மீட்பு: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

இந்த விலைமதிப்பற்ற சோழர் கால கல்வெட்டுகள், தமிழ் நாகரிகத்தின் பெருமைமிக்க சின்னமாகவும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க லைடன் செப்பு தகடுகளை நமது தாய்நாட்டிற்கு வெற்றிகரமாக மீட்டு கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விலைமதிப்பற்ற சோழர் கால கல்வெட்டுகள், தமிழ் நாகரிகத்தின் பெருமைமிக்க சின்னமாகவும், மாபெரும் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் நிர்வாக மேன்மைக்கும், தமிழ் மக்களின் கடல்சார் பெருமிதத்திற்கும் உரியவை.

அவை திரும்ப ஒப்படைக்கப்பட்ட இந்த தருணம், ஒவ்வொரு தமிழருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் அளவற்ற பெருமிதம் அளிக்கும் தருணமாகும்.

இவ்வாறு அதில் கூறினார்.

SCROLL FOR NEXT