தமிழக செய்திகள்

மின்வாரியத்தில் புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு ஆட்கள் தேர்வு

தலா 8 நபர்கள் வீதம் 60 நாட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை,

மழைக்காலம் மற்றும் கோடைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆட்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட் மீட்டர் மாற்றும் பணியை விரைவுபடுத்த கூடுதல் ஆட்களை நியமிக்க மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில்

இதன்படி 45 மின் பகிர்மான வட்டங்களிலும், ஒவ்வொரு வட்டத்திற்கும் வயர்மேன் கிரேடு-2, எலக்ட்ரீசியன் கிரேடு-2 ஆகிய பணிகளுக்க தலா 8 நபர்கள் வீதம் 60 நாட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர், நிர்வாக என்ஜினீயர் ஆகியோர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் இவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT