தமிழக செய்திகள்

சென்னையில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

சென்னையில் நேற்று பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக தமிழ்நாட் டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இவ்வளவு நாள் வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை யில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன்தொடர்ச்சி யாக நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும், நேற்று முன் தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி மழை கொட்டத்தொடங்கியது. எப் போதும் போல பெய்யாமல் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

சென்னையில் நேற்று மழை வெளுத்துவாங்கியது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ் வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

இந்தநிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது .திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அரபிக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT