சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு பல வழித்தடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏர் இந்தியா மற் றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் சென்னை-அந்தமான், சென்னை-திருச்சி, சென்னை-கோவை, சென்னை-மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை குறைத்துள்ளன. குறிப்பாக அந்தமான் வழித்தடத்தில் இருந்த தினசரி சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல் தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட தென்மாவட்ட வழித்தடங்களிலும் விமான எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கான சேவைகளும் குறைக்கப்பட் டுள்ளன.
வெளிநாட்டு வழித்தடங்களான சிங்கப்பூர், துபாய், இலங்கை, கோலாலம்பூர் உள்ளிட்ட சேவைகளும் குறைக்கப்பட்டு சில வழித்தடங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா தரப்பில் உயர் அதிகாரிகள் கூறும்போது, "எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்க ளால் விமான சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளது. மாற்று விமான ஏற்பாடுகள், பயண தேதி மாற்றம், கட்டணமின்றி ரத்து மற்றும் பணம் திருப்பி வழங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவது” என்றனர். ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு விமான சேவைகள் சீராகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.