சென்னை ஐகோர்ட் 
தமிழக செய்திகள்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் அதிமுக மனு

அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அருள் விக்னேஷ். இவர், மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், கலெக்டரின் வீட்டுக்குச் சென்று அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகார்களை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்க2ல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT