தமிழக செய்திகள்

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...எழும்பூரில் இருந்து நாளை அதிகாலை முதல் வழக்கமான ரெயில் சேவை

எழும்பூரில் நடைமேடை பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டதால் மீண்டும் முழுமையான ரெயில் சேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தில் ரூ.735 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, பிரம்​மாண்ட நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடந்து வரு​கிறது. இதற்கு அடித்​தளம் அமைக்​கும் பணி காரண​மாக, 10, 11-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன. இதனால், கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு தடத்​தில் கடந்த பிப்​.19-ம் தேதி முதல் 44 மின்​சார ரெயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்​சார ரெயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வழக்​க​மான ரெயில் சேவை குறைக்​கப்​பட்​டு, தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி, 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரெயில் இயக்​கப்​படு​கிறது. இது மட்​டுமின்​றி, இரு மார்க்​கத்​தி​லும் எழும்​பூர் நோக்​கிச் செல்​லும்​போது ரெயில்​கள் தாமத​மாக இயக்​கப்​படு​கின்​றன. இது​மட்​டுமின்​றி, எழும்​பூர், சென்ட்​ரலுக்கு உரிய நேரத்​தில் செல்ல முடி​யாமல் விரைவு ரெயில்​களை தவற​விடும் நிலை​யும் ஏற்​படு​கிறது. இதனால், பயணி​கள் கடும் அவதி​யடைந்து வரு​கின்​றனர்.

இந்தநிலையில் எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்​க​மான புறநகர் மின்​சார ரெயில் சேவை ஏப்​.5-ம் தேதி முதல் தொடங்​கும் என்று ரெயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தநிலையில், பயணிகளின் அவதி இன்று இரவுக்குள் முடிவுக்கு வருகிறது. நடைமேடை பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டதால் மீண்டும் முழுமையான ரெயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.