அரக்கோணம் நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை கமாண்டண்ட் கபில் மற்றும் பிரவீன் பிரசாத் ஆகியோர் தலைமையிலான வீரர்கள் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். அப்போது மழை வெள்ள காலங்களில் பாதுகாப்பு, இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, தீயினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றுவது, வாகனங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து செய்து காண்பித்தனர். இதில் பயிற்சி மையத்தின் அதிகாரிகள் மற்றும் பயிற்சி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.