தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் ரெனால்ட் குழுமத்தினர் சந்திப்பு... முதலீட்டை அதிகரிக்க கோரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்யை ரெனால்ட் குழுமத்தினர் சந்தித்து பேசினர்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் பிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் பேப்ரிஸ் காம்போலிவ்,

ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் ஸ்டீபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT