தமிழக செய்திகள்

தாராபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரத்தில் சுண்ணாம்பு காடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையம் பகுதியில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகியது. இதையடுத்து உடைப்பு சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் நேற்று முன்தினம் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் உடைப்பை சரி செய்தனர்.