காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்திற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதிலாக தொழிற்துறை பூங்கா அமைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்ததிட்டத்திற்காக முதற்கட்டமாக 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் விஜய் பரந்தூருக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நீர் நிலைகளில் விமான நிலையம் கட்டக்கூடாது என்று விவசாயிகள், இயற்கை வள ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விமான நிலையத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனினும், பொருளாதார மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள் மற்றும் வல்லுநர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் பணிகளை நிறுத்துவதால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வருகிறார்கள்.