சென்னை,
மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழி தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகைகளில் ஹிந்தி என பரவும் தவறான தகவல்
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டது கிடையாது.
மதுரை - திண்டுக்கல் ( NH-44 ) தேசிய நெடுஞ்சாலையையும், மதுரை - திருச்சி ( NH-38 ) தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட்ட இணைப்புச் சாலை ( NH-744A) ஆகும். மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழி தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.