சிவகங்கை,
தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என பா.ஜனதா கட்சி சார்பில் மத்திய ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜனதா ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் நாகேஸ்வரன், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ் வினி வைஷ்ணவிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
”தாம்பரம் முதல் செங்கோட்டை வரையும், செங்கோட்டை முதல் தாம்பரம் வரையும் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தினசரி இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரையில் இருந்து செல்லும் வகையில் நீட்டித்து தர வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.