தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT