தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் கொசு பாதிப்பை தடுப்பதற்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க தீர்மானம்

புள்ளி விவரப் பதிவாளர் உள்ளிட்ட கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் கொசு பாதிப்பை தடுப்பதற்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இருக்கும் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கொசுக்களால் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளுக்கான அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 3 வட்டார பூச்சியியல் வல்லுநர்களுக்கான ஆய்வுப் பொருட்களோடு, ஒரு ஓட்டுநருடன் கூடிய ஆய்வு வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புள்ளி விவரப் பதிவாளர் உள்ளிட்ட கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பூச்சியியல் வல்லுநர்கள் வரும் நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு புழுக்களை கட்டுப்படுத்துவது, கொசு முட்டைகளை அழிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, கொசு பாதிப்பை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.