தமிழக செய்திகள்

தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம்: ”இந்த ஒற்றுமைப்போக்கு தொடரவேண்டும்” - கமல்ஹாசன் எம்.பி.

சட்டமன்றத்தில் தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்வளிப்பதாக கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட், FCRA என இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்வளிப்பதாக ம.நீ.ம .தலைவர் கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வு

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது.

நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதுமே அத்தீர்மானங்கள்.

அரசுக்கு பாராட்டுகள்

பா.ஜ.க. நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்.

தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடரவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.