தமிழக செய்திகள்

‘பெண்களை மதிப்பது பா.ஜ.க.வின் அகராதியிலேயே இல்லாத விஷயம்’ - நயினார் நாகேந்திரன் மீது பெ.சண்முகம் கடும் விமர்சனம்

நயினார் நாகேந்திரன் மீது தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை மதிப்பது பா.ஜ.க.வின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாடு அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.