தமிழக செய்திகள்

வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

மாவட்ட கலெக்டரின் பொது நேர்முக உதவியாளரே இப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா. இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும். இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே. மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட. மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT