தமிழக செய்திகள்

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை,

இன்று (02.06.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர், ம. விஜய் பாலாஜி தலைமையில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

அவ்வாய்வுக் கூட்டத்தின் போது துறையால் தயாரிக்கப்படும் வேட்டி சேலைகள், பவானி ஜமுக்காளம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உடனடியாக அணியக்கூடிய சேலைகள், கார்பரேட் கிஃப்ட் தொகுப்புகள், புதிய இரக வடிவமைப்புகள் மற்றும் நவீன அலங்கார அம்சங்கள் கொண்ட குர்திகள், இதர உடைகள் ஆகிய தயாரிப்புகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி பார்வையிட்டார்.

இவ்வாய்வுக் கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தி. ந. வெங்கடேஷ், துணிநூல் ஆணையர், வெ. ஷோபனா, கோ-ஆப்டெக்ஸ், மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், தலைமைச் செயல் அலுவலர் (மு.கூ.பொ.) அமிர்தஜோதி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.