தமிழக செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மாலை 4:30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ந்தேதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

முதல்-அமைச்சர் விஜய், ஒவ்வொரு அமைச்சர் அறைக்கும் சென்று அவர்களை வாழ்த்தி, அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசு பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று மதியம் 2.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் தொடங்கி உள்ளது.

மாலை 4:30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உட்கட்டமைப்புகள், பயிற்சி மையம், ஒலிம்பிக் அகாடமி. விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு வீரர்களுடைய உணவு முறை, பயிற்சிகள், வீரர்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.