தமிழக செய்திகள்

“அரிசி விலை ஆகாயத்தை நோக்கி பறக்கிறது..! ஆனால் ஆட்சியாளர்கள்..” - சி.பி.எம். கண்டனம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

சென்னை,

அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், கடந்த சில மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் மளிகை கடை பக்கம் போவதையே குறைத்துக்கொண்டார்கள். இந்த சூழலில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

அரிசி விலை

இந்நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது:-

அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1,800 ஆக இருந்தது.

இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT