தமிழக செய்திகள்

காதலனுக்காக போட்டி; நடுரோட்டில் குடும்பிடி சண்டை போட்ட இளம்பெண்கள்

இளம்பெண்கள் காதலனுக்காக குடுமிப்பிடி சண்டை போடும்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவினாசி,

'காதலனுக்காக 2 இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

வடமாநில தொழிலாளர்கள்

வாலிபத்தில் காதலை கடக்காதவர்கள் யாருமில்லை. ஒரு பெண்ணை பல ஆண்கள் விரும்பி அவளை சுற்றிச்சுற்றி வருவதை நாம் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆணுக்காக, பெண்கள் போட்டிப்போட்டு சண்டை யிடுவது அரிதான நிகழ்வாகவே இருக்கிறது.

' அப்படி ஒரு நிகழ்வு தான், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் அவிநாசி பகுதியில் தங்கி வேலை செய்யும் வடமாநில பெண்கள் 2 பேர், நேற்று முன்தினம் விடுமுறையை யொட்டி புதிய பஸ் நிலையம் அருகே மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென ஒருவரை யொருவர் திட்டியபடி குடுமிப்பிடி சண்டை போட தொடங்கினர். தலைமுடியைப் பிடித்து இழுத்தும், மாறி மாறி அறைந்தும் தீவிரமாக மோதிக் கொண்டனர்.

திகைத்து நின்ற காதலன்

அருகே நின்ற வடமாநில வாலிபர், திகைத்தபடி அவர்களின் சண்டையை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அந்த பெண்கள் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலரும் கூடிநின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சிலர், தங்களது செல்போனில் இவர்கள் சண்டைபோடும் காட்சியை ரசித்தபடி வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

இதுகுறித்து உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அவினாசி பகுதியில் தங்கி இருந்து பின்னலாடை நிறுவனத் தில் வேலை பார்த்து வருவதும், 2 பேரும் ஒரே வாலிபரை காதலித்து வருவதும் தெரியவந்தது.

காதலனுக்கு போட்டி

இது தொடர்பாக அவர்களுக்கிடையே செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் நேற்று முன்தினம் அவி னாசி புதிய பஸ் நிலையம் அருகே அந்த வாலிபருடன், ஒரு இளம்பெண் நின்று பேசிக்கொண்டிருந்ததை, அங்கு வந்த மற்றொரு பெண் பார்த்துள்ளார்.

இதை பார்த்ததும் அந்த பெண் ஆவேசம் அடைந்தார். 'என் காதலருடன் நீ எப்படி சுற்றலாம்' என்று கேட்டு தகரா றில் ஈடுபட்டதால் சண்டை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை சமாதானம் செய்து அங்கி ருந்து அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்கள் காதலனுக்காக குடுமிப்பிடி சண்டை போடும்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT