புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்ததுடன், அவர்களுடைய 2 மகள்கள் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி திலக சந்திரா. இவர்கள் இருவரும் மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அவர்களுடைய வாகனம் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அதில் பயணம் செய்த தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களின் இரு மகள்களான தர்ஷிகா, நிரஞ்சனா படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.