தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை

கல்லிடைக்குறிச்சியில் உள்ள சொந்த வீட்டிற்கு போலீஸ்காரர் ஒருவர் சென்றபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஞானசுந்தர் (வயது 38).

இவர் விக்கிரமசிங்கபுரத்தில் குடும்பத்துடன் தங்கி இருப்பதால், கல்லிடைக்குறிச்சியில் உள்ள சொந்த வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார். நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஞானசுந்தர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

அவர் வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரம், குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.