தமிழக செய்திகள்

'ரூட் தல' பிரச்சினை: மெரினாவில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து- 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

'ரூட் தல' பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து, சென்னை மெரினா கடற்கரையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

சென்னை,

சென்னை மெரினாவில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் ஒரு மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

'ரூட் தல' பிரச்சினை

சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது போலீசாருக்கு பெரிய தலைவலியை கொடுத்தது. 'ரூட் தல' எனப்படும் யார் தலைவன்? என்பதில் இந்த மோதல்கள் அடிக்கடி நடந்தன. பொதுவாக பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே இந்த 'ரூட் தல' பிரச்சினையில் மோதல்கள் நடந்து வந்தன.

மெரினாவில் கல்லூரி மாணவர் கத்தியுடன் கைது

வடசென்னை பகுதியில் இருந்து பஸ்களில் வரும் மாணவர்கள் மத்தியில் தான் பெரும்பாலும் இந்த மோதல்கள் நடந்து வந்தன. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கையால் சமீபகாலமாக இந்த மோதல் சம்பவங்கள் குறைந்துவிட்டன. சமீபத்தில் மெரினாவில் கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியுடன் கைது செய்யப்பட்டார்.

5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோதலில் ஈடுபட்டதாக 5 மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.