தமிழக செய்திகள்

மதுரையில் ரவுடி முகம் சிதைத்துக் கொலை - 5 பேர் கைது

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் 5 பேர் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மதுரை,

ரவுடியை முகம் சிதைத்து கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி கொலை

மதுரை சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் முகம் சிதைத்து கொல்லப்பட்டதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலைசெய்யப்பட்டிருப்பது யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய சூர்யா (வயது 26) என்பது தெரியவந்தது. பின்னர், கொலை செய்தவர் யார்? மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியபோது கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அஸ்வின் என்பவருடன் ஏற்பட்ட தகராறில், அஸ்வின் உட்பட 5 பேர் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அஜய், விஷ்ணு, செல்வக்குமார், அஸ்வின் மற்றும் சந்துரு ஆகிய 5 பேரையும் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். மது அருந்தியபோது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT