தமிழக செய்திகள்

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி

சட்டமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;

1. தற்போதைய ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் குடும்ப சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே மக்களின் சுமையை போக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். 12ம் வகுப்பு வரை படித்து, வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

3.மீன்பிடி தடைக்காலங்களில் உதவித்தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

4. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இனி ஆண்டு தோறும் ரூ.1,000 வழங்கப்படும்

5. கைத்தறி நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

6. விசைத்தறி நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.

7. நகரப்பகுதிகளில் நடைபாதை, சிறுவியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வருவாயை பெருக்கி, நாங்கள் அறிவித்த நலத்திட்ட உதவிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.