சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த மே 10-ந் தேதி முதல் நவம்பர் 21-ந் தேதி வரையிலான 195 நாட்களில் தொழில் வளர்ச்சியில் பல்வேறு முக்கிய சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் 112 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் ரூ.1.14,811.91 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகளின் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
மேலும், 23 துறைகளில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளிலும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடியும், மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடியும், ஜவுளித் துறையில் ரூ.7,871 கோடியும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு தொழில் துறைகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதனால் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய திறன் மையங்கள் மூலம் 5,870 பேருக்கு உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. 112 திட்டங்களில் 83 திட்டங்கள் நிலம் உறுதி செய் யப்பட்ட அல்லது அதற்கு மேற்பட்ட நிலையை எட்டியுள்ளன. இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த செயலாக்க முன்னேற்றம் 74.11 சதவீதமாக உள்ளது. மேலும், 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன.
தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 21 வேலை நாட்களுக் குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தொழில் அனுமதிகளை விரைவாக வழங்க தலை மைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்கு விப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் 11 துறைகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில் சீர்தி ருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை மேலும் முன்னணி மாநிலமாக உருவாக்கவும், அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கவும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.